/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விலை உயர்ந்த 'பைக்'குகள் திருடியவருக்கு 'காப்பு'
/
விலை உயர்ந்த 'பைக்'குகள் திருடியவருக்கு 'காப்பு'
ADDED : பிப் 22, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி, சென்னை தரமணி, சன்னதி தெருவை சேர்ந்தவர் மதன், 24; தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு டிசம்பரில், அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த, 'யமஹா ஆர்- - 15' பைக் திருடுபோனது.
அவர் அளித்த புகாரின்படி, தரமணி போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக ஆய்வு செய்தனர். புளியந்தோப்பு, மேட்டு தெருவை சேர்ந்த அருண்குமார், 19, என்பவர் பைக் திருடியது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்தபோது, தரமணி பகுதியில் விலை உயர்ந்த மூன்று பைக்குகள் திருடியது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.