/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் விழுந்த மாடுகள் மீட்பு
/
கால்வாயில் விழுந்த மாடுகள் மீட்பு
ADDED : செப் 15, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், பிரித்வி நகரில் உள்ள குப்பை மேட்டில், மூன்று எருமை மாடுகள், நேற்று மேய்ந்து கொண்டிருந்தன.
கால்வாய் தெரியாத அளவிற்கு குப்பை கொட்டப்பட்டு இருப்பதால், மாடுகள் மூன்றும் தவறி, 3 அடி ஆழ கால்வாயில் விழுந்தன.
மேலே ஏற முடியாமல் தவித்த மாடுகளை மீட்க, பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர்.
மாடுகளின் கொம்புகளில் கயிறு கட்டி, பொக்லைன் இயந்திரம் வாயிலாக மெதுவாக இழுத்து, மூன்று எருமை மாடுகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.