/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையின் நடுவே மின்மாற்றி அபாயத்தில் குடியிருப்புவாசிகள்
/
சாலையின் நடுவே மின்மாற்றி அபாயத்தில் குடியிருப்புவாசிகள்
சாலையின் நடுவே மின்மாற்றி அபாயத்தில் குடியிருப்புவாசிகள்
சாலையின் நடுவே மின்மாற்றி அபாயத்தில் குடியிருப்புவாசிகள்
ADDED : செப் 03, 2024 12:24 AM

மணலி,மணலி, சாலைமா நகரில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சாலைமா நகர், 4வது தெருவில், சாலையின் நடுவே மின்மாற்றி ஒன்று, பாதசாரிகள் நடப்பதற்கும், போக்குவரத்திற்கும் இடையூறாகவும் உள்ளது.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் குறைவாக இருந்ததால், ஊருக்கு ஒதுக்குபுறமாக மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
நாளடைவில் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளும் அதிகரிக்கவே, மின் மாற்றியை தாண்டியும் குடியிருப்புகள் கட்டப்பட்டு விட்டன. இருப்பினும், மின்மாற்றி அகற்றப்படவில்லை. இதன் காரணமாக, மின்மாற்றியை ஆபத்தான முறையில், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் கவனித்து, மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
செய்தி:பாபுபடம்: லட்சுமணன் சாலையில் நடுவே நிற்கும் மின்மாற்றினை, குடியிருப்புவாசிகள் ஆபத்தான முறையில் கடக்கிறனர்.இடம்: சாலைமாநகர், மணலி சென்னை.