/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொசப்பூருக்கு மினி பஸ் பகுதிவாசிகள் கோரிக்கை
/
கொசப்பூருக்கு மினி பஸ் பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஆக 08, 2024 12:38 AM
மணலி மண்டலம் 17வது வார்டு, கொசப்பூர், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதிவாசிகள் ஏராளமானோர் மணலி, கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட சென்னையின் பிரதான பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்து வீடு திரும்ப வேண்டி உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை குறைவாக உள்ளது. எனவே, மணலிபுது நகர், தீயம்பாக்கம், கொசப்பூர், வடபெரும்பாக்கம், எம்.எம்.பி.டி., வழியாக கோயம்பேடு வழியாக, ஒரு வழிதடமும்; எம்.எம்.பி.டி., முதல் வடபெரும்பாக்கம், கொசப்பூர், தீயம்பாக்கம் வழியாக, மணலிக்கும் சிற்றுந்து ஏற்படுத்த வேண்டும்.
மாநகர போக்குவரத்து கழகம், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சி.மூர்த்தி, தியாகி விஸ்வநாததாஸ் நகர், கொசப்பூர் மணலி.