/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்வாதார வீடுகள் விரைந்து கட்ட குடியிருப்புவாசிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 27, 2024 12:34 AM

காசிமேடு,
காசிமேடு, காசிபுரம் 'ஏ பிளாக்'கில், 64 நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்புகள் உள்ளன. இங்கு நுாற்றுக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர். 30 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து, அபாயகரமான நிலையில் காட்சியளித்தது.
மேலும், கடந்த 2023 டிசம்பர் 4ம் தேதி, 'மிக்ஜாம்' புயலின் போது காசிமேடு நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டன. கட்டடத்தின் கூரைகள் இடிந்து விழுந்தன. சுவரில் விரிசல் விழுந்து அபாயகரமாக காட்சியளித்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதே பகுதியில் இருந்த சமூக நலக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
பின், நான்கு மாதங்களுக்குப் பின், நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பு வீடுகளில் இருந்து முழுதுமாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அந்த வீடுகள் இடிக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் வசித்த மக்கள், அதே பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
தற்போது ஓராண்டாகியும், இதுவரை நகர்ப்புற வாழ்வாதார வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்படவில்லை. எனவே, விரைந்து வீடுகளை கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கவுன்சிலர் பவித்ரா நரேஷ்குமார் கூறுகையில், ''மிகவும் அடித்தட்டு மக்களே இப்பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். விரைந்து நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பு வீடுகளை கட்ட வேண்டுமென மாநகராட்சி கூட்டத்திலும் அறிவுறுத்தி உள்ளேன்,'' என்றார்.