/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பத்திற்கு மண் கொட்டி முட்டு கொடுத்த பகுதிவாசிகள்
/
மின் கம்பத்திற்கு மண் கொட்டி முட்டு கொடுத்த பகுதிவாசிகள்
மின் கம்பத்திற்கு மண் கொட்டி முட்டு கொடுத்த பகுதிவாசிகள்
மின் கம்பத்திற்கு மண் கொட்டி முட்டு கொடுத்த பகுதிவாசிகள்
ADDED : மே 28, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை ஊராட்சி 2வது வார்டு, காந்தி நகர் முதல் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின் கம்பம் ஒன்று, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து உள்ளது. சாலையில் விழுந்தால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், பகுதிவாசிகள் மின் கம்பத்தின் கீழ் மண் கொட்டி முட்டு கொடுத்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், திருநின்றவூர் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே, விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- டி.கே.சங்கர், நடுக்குத்தகை.