/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடியில் 'மின் திருட்டு' ஜரூர் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
/
வியாசர்பாடியில் 'மின் திருட்டு' ஜரூர் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
வியாசர்பாடியில் 'மின் திருட்டு' ஜரூர் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
வியாசர்பாடியில் 'மின் திருட்டு' ஜரூர் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
ADDED : ஜூலை 30, 2024 12:57 AM

வியாசர்பாடி, வியாசர்பாடி, நேரு நகர் முதல் தெருவில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, பெரும்பாலான இடங்களில், புதை மின் வடங்களால் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக, ஆங்காங்கே சாலையோரங்களில் மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு கொடுப்பட்டுள்ளது.
இந்த மின் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், பாதுகாப்பற்ற முறையில் திறந்து கிடக்கிறது. ஒயர்கள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
சில இடங்களில், மின் பெட்டிகள் 'புதை மின் பெட்டி'களாக மாறியுள்ளன. புதை மின் வடங்களும் சாலைக்கு மேலே 'மலைப்பாம்பு' போன்று பயமுறுத்தும் வகையில் உள்ளது.
வியாசர்பாடியை பொறுத்தவரை, குழந்தைகள், சிறுவர் - சிறுமியர் சாலையை விளையாட்டு மைதானமாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மின் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், வியாசர்பாடி, நேரு நகர் முதல் தெருவில் கடந்த ஓராண்டாக மின் பெட்டியில் மூன்று இடங்களில் கேபிள் துண்டிக்கப்பட்டு பழுதாகியுள்ளது. இங்கு அடிக்கடி மின் கசிவு ஏற்படுகிறது.
மேலும், சுற்றுவட்டார வீடுகளில் வசிப்போர், கொக்கி மாட்டி மின்சாரத்தை திருடி தங்களது வீடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தொடர் மின்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மின் திருட்டு குறித்து, வியாசர்பாடி மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புதிதாக கேபிள் வாங்கி கொடுத்தால், மாற்றி தருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், கேபிள் மாற்றி தரும் ஊழியருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
இங்கு பணம் கொடுத்து மின் கேபிளை மாற்ற யாரும் முன்வரவில்லை. விரைவில் பருவ மழை காலம் வர உள்ளதால் உயிர் சேதம் ஏற்படும் முன், மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.