/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வுபெற்ற ஆர்.டி.பி., ஊழியர்கள் கருத்தரங்கம்
/
ஓய்வுபெற்ற ஆர்.டி.பி., ஊழியர்கள் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 15, 2024 01:28 AM
தி.நகர்:ஓய்வுபெற்ற தபால் துறை ஆர்.டி.பி., பணியாளர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் நேற்று, தி.நகரில் நடந்தது.
தபால் துறையில் பணி செய்து ஓய்வுபெற்ற ஆர்.டி.பி., எனப்படும் குறுநேரப் பணியாளர்கள், சந்திப்பு மற்றும் கருத்தரங்கம், நேற்று காலை தி.நகர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள அலமேலுமங்கா திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், மாநிலத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஓய்வுபெற்ற ஆர்.டி.பி., ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்கள்,1980ம் ஆண்டு தபால் துறையில் பணியில் சேர்ந்தனர்.
ஆனால், மத்திய அரசின் கொள்கையால், பணி நிரந்தமின்றி, தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வந்தனர். இதையடுத்து, படிப்படியாக 1997ம் ஆண்டிற்குள், அனைவரும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஹைதராபாத் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில், அம்மாநில அரசு ஆர்.டி.பி., ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் பணிக்கு சேர்ந்த நாள் முதல் உள்ள ஊதியம் வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பை, தமிழக ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழக்கு தொடர்வது உள்ளிட்ட கோரிக்கைகள், கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.