/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சதுர்வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
/
சதுர்வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
ADDED : மே 20, 2024 01:52 AM

படப்பை:தாம்பரம் அருகே மணிமங்கலத்தில், பழமையான சதுர்வேத விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்து வந்த திருப்பணிகள், சமீபத்தில் முடிந்தன.
இதையடுத்து, கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 17ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜை, கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது.
தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் விமானம், சதுர்வேத விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
காலை 10:30 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சதுர்வேத விநாயகர் மங்கள வாத்தியத்துடன் திருவீதி உலாவும் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

