/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடிந்த சுவர் வழியாக தண்டவாளத்தை கடக்கும் பயணியருக்கு விபத்து அபாயம்
/
இடிந்த சுவர் வழியாக தண்டவாளத்தை கடக்கும் பயணியருக்கு விபத்து அபாயம்
இடிந்த சுவர் வழியாக தண்டவாளத்தை கடக்கும் பயணியருக்கு விபத்து அபாயம்
இடிந்த சுவர் வழியாக தண்டவாளத்தை கடக்கும் பயணியருக்கு விபத்து அபாயம்
ADDED : மே 17, 2024 01:09 AM

குரோம்பேட்டை, குரோம்பேட்டை ரயில் நிலையத்தை, லட்சுமிபுரம், திருநீர்மலை, துர்கா நகர், வெங்கட்ராமன் நகர், அஸ்தினாபுரம், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20,000 பயணியர், தினம் பயன்படுத்துகின்றனர்.
முக்கியமான இந்த ரயில் நிலையத்தில், பயணியரின் வசதிக்காக கண்காணிப்பு கேமரா, மின் விளக்கு, கூரை, மின் துாக்கி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, குரோம்பேட்டை ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் நீண்ட நாட்ளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்டேஷன் பார்டர் சாலையை ஒட்டி, விரைவு ரயில்கள் நிற்கும் நடைமேடை ஓரம் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர், சில மீட்டர் துாரத்திற்கு இடிந்து விழுந்துவிட்டது.
அஸ்தினாபுரம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணியர், நடைமேம்பாலம் வழியாக நடைமேடைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால், சுவர் இடிந்து விழுந்த பகுதி வழியாக, தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.
'பீக் ஹவர்ஸ்' சமயத்தில், நுாற்றுக்கணக்கான பயணியர், ஆபத்தான வகையில் இவ்வாறு தண்டவாளத்தை கடக்கும்போது, விரைவு ரயில் வந்தால் பெரும் விபத்து ஏற்படும். இது குறித்து புகார் தெரிவித்தும், ரயில்வே அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
விபத்து ஏற்படும் முன், இடிந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டவும், தண்டவாளம் வழியாக பயணியர் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

