ADDED : மார் 28, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களுக்கு காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று லாரி வாடகை உயர்த்தி தரக் கோரி, அதன் உரிமையாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளனர்.
இதனால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.