/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமாபுரத்தில் சாலை ஆக்கிரமிப்பு ஒருவர் இறந்தும் அதிகாரிகள் மவுனம்
/
ராமாபுரத்தில் சாலை ஆக்கிரமிப்பு ஒருவர் இறந்தும் அதிகாரிகள் மவுனம்
ராமாபுரத்தில் சாலை ஆக்கிரமிப்பு ஒருவர் இறந்தும் அதிகாரிகள் மவுனம்
ராமாபுரத்தில் சாலை ஆக்கிரமிப்பு ஒருவர் இறந்தும் அதிகாரிகள் மவுனம்
ADDED : ஆக 24, 2024 12:23 AM

ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டு ராமாபுரத்தில், வள்ளுவர் சாலை உள்ளது. இச்சாலை வளசரவாக்கம், ராமாபுரம், மவுன்ட் -- - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பின் கீழ் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. இச்சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையின் இருபுறமும், ஹோட்டல்கள், பேக்கரி, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் அதிகம் உள்ளன.
இக்கடை உரிமையாளர்கள், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து, பொருட்களை விற்பனைக்காக குவித்து வைக்கின்றனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.
இங்குள்ள பழைய பொருட்கள் வாங்க மற்றும் விற்பனை செய்ய, லோடு ஆட்டோக்கள் வருகின்றன. இவை சாலையோரம் நிறுத்தப்படுவதால்,'பீக் ஹவர்'களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமாபுரம் கோத்தாரி நகரைச் சேர்ந்த லிங்கமூர்த்தி, 54 என்பவர், கடந்த 8ம் தேதி இரவு, வள்ளுவர் சாலையில் 'பைக்'கில் சென்றார்.
அப்போது, இச்சாலையில் பொருட்கள் இறக்க வந்த லோடு வேன் கதவை திறந்த போது, அதில் மோதி சாலையில் விழுந்தார். அப்போது, மினி லாரி இவர் மீது ஏறியது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கமூர்த்தி, கடந்த 15ம் தேதி உயிரிழந்தார்.
இதுபோன்ற உயிரிழப்பு மீண்டும் ஏற்படாமல் இருக்க, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சில வாரங்களுக்கு முன், வள்ளுவர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.