/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் குழாய் பதிப்பு பணியால் சுடுகாட்டிற்கு பாதையில் சிக்கல்
/
குடிநீர் குழாய் பதிப்பு பணியால் சுடுகாட்டிற்கு பாதையில் சிக்கல்
குடிநீர் குழாய் பதிப்பு பணியால் சுடுகாட்டிற்கு பாதையில் சிக்கல்
குடிநீர் குழாய் பதிப்பு பணியால் சுடுகாட்டிற்கு பாதையில் சிக்கல்
ADDED : ஆக 02, 2024 12:52 AM

மணலி, சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 18 வது வார்டில், ஹரிகிருஷ்ணபுரம் சுடுகாடு உள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நகர்களை சேர்ந்தவர்கள், இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுடுகாட்டிற்கு செல்லும் பிரதான சாலையான பாரதியார் தெருவில் மூன்று மாதங்களாக குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அவ்வழியே சுடுகாட்டிற்கு செல்லும் இறுதி ஊர்வலங்கள் மற்றும் உடன் செல்லும் உறவினர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது.
பாரதியார் தெருவில் 6 அடி அளவிற்கு பள்ளம் தோண்டி பணிகள் செய்யப்படுவதால், மீதமுள்ள பாதையில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் வாகனம், பள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் முக்கியம் என்றாலும், சுடுகாட்டிற்கு செல்லும் வழியும் பிரதான பிரச்னை என்பதால், அதிகாரிகள் கவனித்து, ஒப்பந்ததாரரை விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.