sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓராண்டுக்கு பின் சாலை பணி

/

ஓராண்டுக்கு பின் சாலை பணி

ஓராண்டுக்கு பின் சாலை பணி

ஓராண்டுக்கு பின் சாலை பணி


ADDED : மே 22, 2024 12:16 AM

Google News

ADDED : மே 22, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு, பட்டாபிராம், காந்தி நகர், கக்கன்ஜி தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கக்கன்ஜி தெரு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இது குறித்த புகாரை அடுத்து, தார்ச்சாலை அமைக்க கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது.ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், கடந்த ஓராண்டாக அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர். இதனால், அடிக்கடி விபத்து அசம்பாவிதங்கள் நடந்தன.

மேலும், வாகனங்கள் சென்று வருவதால் ஜல்லியில் இருந்து துாசி பறந்து வீடுகளில் படிந்தது. இதனால், ஜன்னல் திறந்து வைக்க முடியாமல் பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.

இது குறித்து, கடந்த 7ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் இங்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பகுதிவாசிகள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us