/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி தேவி நகர் மக்கள் அவதி : கிடப்பில் சாலை அமைக்கும் பணி ஓராண்டாக அதிகாரிகள் பாராமுகம் திருவேற்காடு வாசிகள் கடும் அவதி

ADDED : ஜூன் 13, 2024 04:53 PM

திருவேற்காடு:திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் தேவி நகர் உள்ளது. இங்குள்ள 6வது தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
மேலும், மழைக்காலத்தில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசு தொல்லையால் பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து, புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதை தொடர்ந்து, சாலை அமைக்க திருவேற்காடு நகராட்சி முடிவெடுத்து, கடந்தாண்டு ஜூன் மாதம் பழைய சாலையை பெயர்த்து எடுத்து, புதிய சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டது.
அதன்பின், சாலை அமைக்காமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், சாலையில் இருந்து வெளியேறும் தூசி காற்றால், குழந்தைகள் மற்றும் முதியோர் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், வீடுகளின் மீது தூசி படலம் படிந்து வருகிறது.
அதனுடன் துவங்கப்பட்ட மற்ற இடங்களில், சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவி நகர் 6வது தெருவில் மட்டும் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஜல்லி கொட்டியதை மறந்து மற்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஓராண்டு ஆன நிலையில், ஜல்லிகள் இருந்த இடம் தெரியாமல், மண்ணோடு மண்ணாகி போயுள்ளது. மேலும், வரும் பருவமழை காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவுன்சிலரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.