/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையங்களில் கூரை பணி 'விறுவிறு'
/
ரயில் நிலையங்களில் கூரை பணி 'விறுவிறு'
ADDED : ஏப் 04, 2024 12:41 AM

சென்னை, சென்னை ரயில் கோட்டம், 'அம்ரித்' பாரத் நிலைய திட்டத்தின் கீழ், கூடுவாஞ்சேரி, அம்பத்துார், பரங்கிமலை, கிண்டி உட்பட 15 ரயில் நிலையங்களில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதில், பயணிருக்கான நகரும்படிகள், நடைமேம்பாலம், மின்துாக்கி, 'சிசிடிவி' கேமரா, உணவகங்கள், கூரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பரங்கிமலை, கிண்டி ரயில் நிலையங்களில் புதிய கூரைகள் அமைக்கும் பணி, முழு வீச்சில் நடக்கிறது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''ரயில் நிலையங்களுக்கு ஏற்றார் போல், ஒவ்வொரு நிலையத்திற்கு 8 கோடி ரூபாய் முதல் 14 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பெரும்பாலான ரயில் நிலையங்களில், 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பரங்கிமலை, கிண்டி ரயில் நிலையங்களில் இரட்டை நடைமேடை பகுதிகளில், புதிதாக கூரைகள் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றனர்.

