தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி மாணவயிடம் சீண்டல் ‘போக்சோʼவில் ரவுடி கைது

பள்ளி மாணவயிடம் சீண்டல் ‘போக்சோʼவில் ரவுடி கைது

பள்ளி மாணவயிடம் சீண்டல் ‘போக்சோʼவில் ரவுடி கைது


ADDED : மே 30, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துறைமுகம்: மண்ணடி பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமி, இரு நாட்களுக்கு முன், வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர், சிறுமியை பின்புறமாக கட்டிப்பிடித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து, துறைமுகம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தனியாக சென்ற சிறுமியை, அதே நபர் மீண்டும் பின்தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன், 31, என்பவரை, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us