/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி மாட்டு ராஜா பெங்களூரில் கைது
/
ரவுடி மாட்டு ராஜா பெங்களூரில் கைது
ADDED : செப் 01, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் 'மாட்டு' ராஜா, 42. இவர் மீது, கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்து மிரட்டிய வழக்கில், இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார், பெங்களூரில் பதுங்கியிருந்த மாட்டு ராஜாவை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக தேடப்படும் ரவடி புதுார் அப்புவின் நெருங்கிய நண்பர்.
இதனால், அப்பு பதுங்கியிருக்கும் இடம் குறித்தும், அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.