/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி கொலை வழக்கு: மேலும் மூவர் கைது
/
ரவுடி கொலை வழக்கு: மேலும் மூவர் கைது
ADDED : ஜூன் 01, 2024 12:38 AM

வில்லிவாக்கம், முன்விரோதத்தில் வில்லிவாக்கம் ரவடி கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.சி.எப்., பகுதியைச் சேர்ந்த ரவுடி உதயகுமார், 30, என்பவர், வில்லிவாக்கத்தில், கடந்த 26ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், அதே பகுதியில், கடந்த 2022ல் ரவுடி டபுள் ரஞ்சித் என்பவரை கொலை செய்த முன்விரோதத்தில், ஆடு சரவணன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, உதயகுமாரை கொலை செய்தது தெரிந்தது. இந்த வழக்கில், ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் முக்கிய குற்றவாளியான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆடு சரவணன், 24, ராஜேஷ், 30, நெற்குன்றத்தைச் சேர்ந்த சூர்யா, 23, ஆகிய மூவரை, போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். மூவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.