/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 கோடி நிலமோசடி: முதியவருக்கு ' காப்பு '
/
ரூ.1 கோடி நிலமோசடி: முதியவருக்கு ' காப்பு '
ADDED : செப் 03, 2024 12:20 AM

ஆவடி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி, 50. இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில், பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான 3,600 சதுர அடி நிலம் இருந்தது.
அதை, பழனியப்பன், ராம்தாஸ் என்பவருக்கு, பொது அதிகாரம் கொடுத்திருந்தார். ராமதாஸ் அந்த நிலத்தை இரண்டாக பிரித்து, 532 சதுர அடி நிலத்தை ஆதிகேசவன் என்பவருக்கும், மீதமுள்ள 3,068 சதுர அடி நிலத்தை எனக்கும் கிரையம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில், ஆதிகேசவன், நண்பர்களான மேகநாதன், சரவணன் மற்றும் மோகன் ஆகியோருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் உருவாக்கி பதிவு செய்து, எனக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இது குறித்த புகாரை ஆய்வு செய்த வருவாய் துறையினர், கடந்த 2018ல் இடத்தை அளவீடு செய்து அறிக்கை அளித்துள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஆதிகேசவன், 60, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.