ADDED : மார் 04, 2025 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்:பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குமார், 26. இவர், ராமநாதபுரத்தில் உள்ள சிமென்ட் கற்கள் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
சொந்த ஊருக்கு செல்ல, நேற்று காலை 9:00 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்த அவரிடம், மர்மநபர் ஒருவர் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, அருகே உள்ள முரசொலி மாறன் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரை ஏமாற்றி, 15,000 ரூபாயையும், 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்து மாயமானார்.
இதுகுறித்து, குமார் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.