ADDED : ஆக 02, 2026 08:13 PM
செங்குன்றம்: ஆந்திர லாரியில், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 1.73 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம், மொண்டியம்மன் கோவில் சோதனைச் சாவடியில், செங்குன்றம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை மறித்து சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி, 1.73 கோடி ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன், 36 மற்றும் பவன்குமார், 28, என்பது தெரிய வந்தது.
விசாரணையின்போது, தங்க நகை வாங்குவதற்காக, சென்னைக்கு பணம் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்த நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் இருவரிடம் இருந்து, மூன்று மொபைல்போன்கள் மற்றும் 1.73 கோடி ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
