/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.19.54 கோடி மோசடி: மேலும் ஒருவர் கைது
/
ரூ.19.54 கோடி மோசடி: மேலும் ஒருவர் கைது
ADDED : மே 30, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்; ஐ.டி., ஊழியர். கடந்த மாதம் 11ம் தேதி 'வாட்ஸாப்' எண்ணிற்கு வந்த 'லிங்க்' ஒன்றை திறந்து, 'டிரேடிங் ஆப்'பில் 1.36 கோடி ரூபாய் செலுத்தி பணத்தை இழந்தார்.
புகாரை விசாரித்த மத்திய சைபர் குற்றப் பிரிவு போலீசார், கடந்த 20ம் தேதி ரமேஷ்குமார், அருண் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதில் தொடர்புள்ள, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ், 33, என்பவரை நேற்று கைது செய்தனர்.இந்த கும்பல் பலரிடம், 19.54 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது தெரிந்தது.