/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் 'ஆட்டை'
/
வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் 'ஆட்டை'
ADDED : மே 09, 2024 12:24 AM

ஆவடி,
எர்ணாவூர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத், 28. பொறியியல் படித்த இவருக்கு வேலையின்றி, திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில் எர்ணாவூர், பிருந்தாவன் நகர், முதல் தெருவைச் சேர்ந்த தமிழ் என்ற தீபக், 28, அறிமுகமாகி உள்ளார்.
இவர், தன் உறவினர் பெங்களூரில் சர்வதேச ஐ.டி., நிறுவனத்தின் மேலாளராக உள்ளதாகவும், அங்கு பணியில் சேர்ந்தால் அதிக சம்பளம் கிடைக்குமென கூறியுள்ளார். மேலும் அதற்கு, கம்பெனி மேலாளருக்கு கமிஷன் தரவேண்டுமென, தீபக் கூறி உள்ளார்.
இதை நம்பிய ஸ்ரீநாத், 7 லட்சம் ரூபாயை வங்கி வாயிலாகவும், 13 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட தீபக், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார். சந்தேகமடைந்த ஸ்ரீநாத், ஆவடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில், தீபக் மோசடி செய்தது தெரியவர, நேற்று அவரை கைது செய்தனர்.