/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.32 லட்சம் 'அபேஸ்' 2 பெண் உட்பட மூவர் கைது
/
ரூ.2.32 லட்சம் 'அபேஸ்' 2 பெண் உட்பட மூவர் கைது
ADDED : மே 10, 2024 12:33 AM
அரும்பாக்கம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, 'பி' பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 22. 'ஆன்லைன்' வாயிலாக வேலை தேடி வந்த இவரது மொபைல்போன் எண்ணிற்கு, குறுஞ்செய்தியில் ஒரு, 'லிங்க்' வந்துள்ளது. அதில் கூறப்படும் 'டாஸ்க்'கை முடித்தால், பணம் கிடைக்குமென கூறப்பட்டுள்ளது.
இதை நம்பிய அருண்குமார், முதலில் 10,000 ரூபாயில் ஆரம்பித்து, சிறுக சிறுக, 2.32 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அருண்குமார் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து விசாரித்ததில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா, 22, அண்ணா நகரைச் சேர்ந்த விஜய், 24, ஆந்திராவைச் சேர்ந்த சரஸ்வதி, 23, ஆகியோர் மோசடி செய்தது தெரிந்தது.
இவர்களை கைது செய்து விசாரித்ததில், நல்லம்பட்டி தேஜா, சரஸ்வதி இருவரும், கல்லுாரியில் ஒன்றாக படித்துள்ளனர். பின், வடமாநில நபர் ஒருவரின் உதவியுடன், கமிஷனுக்காக போலி வங்கி கணக்கு துவங்கி, அதன் வாயிலாக பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
மூவரிடமிருந்து, 15 போலி ஏ.டி.எம்., கார்டுகள், மூன்று மொபைல்போன்கள், 15க்கும் மேற்பட்ட வங்கி புத்தகங்களை பறிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர். மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை தேடி வருகின்றனர்.