/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
/
ஏர்போர்ட்டில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2024 12:07 AM
சென்னை, துபாய் மற்றும் அபுதாபி விமானங்களில், அதிக மதிப்புடைய தங்கம் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையுடன் சேர்ந்து, மற்ற நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து, நேற்று முன்தினம் இரண்டு பயணியர் விமானங்கள் வந்தன.
அதில், சந்தேகிக்கும்படி உள்ள பயணியர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வகையில் இரு பெண்கள் உட்பட 10 பேரிடம் சோதனை செய்தனர்.
சோதனையில், 4.65 கிலோ மதிப்புள்ள 10 தங்க செயின்கள் மற்றும் 7.45 கிலோ மதிப்புள்ள தங்க பசைகளை உள்ளாடை மற்றும் காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன் இந்திய மதிப்பு 7.58 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.