/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.84 லட்சம் நிலம் மோசடி 'சாட்சி'க்கு போலீஸ் 'காப்பு'
/
ரூ.84 லட்சம் நிலம் மோசடி 'சாட்சி'க்கு போலீஸ் 'காப்பு'
ரூ.84 லட்சம் நிலம் மோசடி 'சாட்சி'க்கு போலீஸ் 'காப்பு'
ரூ.84 லட்சம் நிலம் மோசடி 'சாட்சி'க்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஆக 01, 2024 01:03 AM

ஆவடி,கோடம்பாக்கம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், ஆவடி மத்திய குற்றப் பிரிவில், கடந்த மே 2ம் தேதி, புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் கிராமத்தில், என் பெற்றோர் பெயரில் இருந்த 4.10 ஏக்கர் நிலத்தை, கடந்த 2012ல், எனக்கு கிரையம் செய்து கொடுத்தனர்.
இந்நிலையில், மேற்கூறிய நிலத்திற்கு தனஞ்செழியன் என்பவர், பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
கடந்த 2022ல், நிலத்தின் மீதான வில்லங்க சான்றை சோதித்த போது, தனஞ்செழியன் மனைவி சம்பூர்ணம் என்பவர், போலியான ஆவணங்கள் வாயிலாக, அவரது மகள்கள் புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் பெயரில், நிலத்தை பத்திரப்பதிவு செய்தது தெரிந்தது.
நில மோசடிக்கு அலெக்சாண்டர், 33, என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார்.
அந்த நிலத்தின் மதிப்பு, 84 லட்சம் ரூபாய். எனவே, நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசார், சாட்சி கையெழுத்திட்டு தலைமறைவாக இருந்த குமணன்சாவடி, ஆட்கோ நகரைச் சேர்ந்த அலெக்சாண்டரை, நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.