/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.டி.ஓ., வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
/
ஆர்.டி.ஓ., வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
ADDED : ஆக 15, 2024 12:22 AM
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள ராஜராஜேஸ்வரி, பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
நேற்று முன்தினம் திருத்தணி அலுவலகத்தில் ராஜராஜேஸ்வரி பணியில் இருந்தபோது, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கணக்கில் வராத 1.46 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், பொன்னேரியில் உள்ள ராஜராஜேஸ்வரியின் வீட்டில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
காலை 8:00 மணிக்கு துவங்கிய சோதனை, பகல் 12:00 மணி வரை நடந்தது. சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.