/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் சிறைவாசிகளின் தயாரிப்புகள் கமிஷனர் ஆபிஸ் வளாகத்தில் விற்பனை
/
புழல் சிறைவாசிகளின் தயாரிப்புகள் கமிஷனர் ஆபிஸ் வளாகத்தில் விற்பனை
புழல் சிறைவாசிகளின் தயாரிப்புகள் கமிஷனர் ஆபிஸ் வளாகத்தில் விற்பனை
புழல் சிறைவாசிகளின் தயாரிப்புகள் கமிஷனர் ஆபிஸ் வளாகத்தில் விற்பனை
ADDED : ஆக 07, 2024 12:47 AM

சென்னை, தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் விதமாக, தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு பயிற்சி பெற்றவர் தயாரிக்கும் பொருட்கள், சிறப்பு சந்தைகள் வாயிலாக அனுப்பி விற்பனை செய்யப்படுகின்றன.
அந்தவகையில், சென்னை கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடமாடும் வாகனம் வாயிலாக, புழல் மத்திய சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில், தோலில் செய்யப்பட்ட பெல்ட், ஷூ, ரெடிமேட் ஆடைகள், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், இட்லி பொடி, ஊறுகாய் மட்டுமின்றி, போர்வைகள், வீடு சுத்தம் செய்ய பயன்படும் திரவங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.