ADDED : ஆக 01, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 30. டிபன் கடை நடத்தும் இவர், நேற்று காலை சாம்பார் தயார் செய்து வைத்திருந்தார்.
அப்போது இவரது ஒன்றரை வயது மகள் பவிஷா, சாம்பார் பாத்திரத்தை இழுக்க முயன்று, அது குழந்தை மீது கொட்டியது.
இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமியை உடனே மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.