/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
/
அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
ADDED : செப் 11, 2024 12:06 AM
அம்பத்துார்,
சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலத்தில், 1,400 துாய்மை பணியாளர்கள், 220 மலேரியா பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1ம் தேதி முதல், துாய்மை பணியாளர்கள் அனைவரும், சென்னை மாநகராட்சியின் 'ஆன்லைன்' செயலி மூலம் வருகை பதிவேடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை அம்பத்துார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்துார் மண்டலஅலுவலகத்திற்குள் நுழைந்து, உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், துாய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
'ஆன்லைன் செயலி வருகை பதிவேடு நடைமுறைபடியே, துாய்மை பணியாளர்கள் அவரவரின் வருகையை பதிவு செய்ய வேண்டும்' என, மேலதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால், அதை தங்களால் மீற முடியாது' என, மண்டல அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.