ADDED : ஆக 30, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கி லீக் போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நேற்று துவங்கியது.
சென்னை, மதுரை உட்பட ஆறு பள்ளி அணிகள், ஆறு மண்டல இணைப்பு அணிகள் பங்கேற்றுள்ன. 12 அணிகளும், நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் மோதி வருகின்றன. நேற்று காலை நடந்த போட்டியில் பாளையங்கோட்டை எம்.என்.அப்துல் ரகுமான் அணி மற்றும் சென்னை செயின்ட் பால்ஸ் அணிகள் மோதின. அதில், 4 - 0 என்ற கோல் கணக்கில் எம்.என்.அப்துல் ரகுமான் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி 4 - 0 கோல் கணக்கில் திருச்சி மண்டல இணைப்பு அணியை வீழ்த்தியது.