தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீப்பற்றி எரிந்த பள்ளி வேன் மடிப்பாக்கத்தில் பரபரப்பு

தீப்பற்றி எரிந்த பள்ளி வேன் மடிப்பாக்கத்தில் பரபரப்பு

தீப்பற்றி எரிந்த பள்ளி வேன் மடிப்பாக்கத்தில் பரபரப்பு


ADDED : ஜூலை 16, 2026 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மடிப்பாக்கம்: தீப்பற்றி எரிந்த பள்ளி வேனால், மடிப்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரிபவர் ரவி. இவர், நேற்று மாலை வேளச்சேரி – -தாம்பரம் சாலையில், பள்ளிக்கரணை நோக்கி வேனை ஓட்டி சென்றார். மடிப்பாக்கம் அடுத்த கைவேலி பகுதியில் பள்ளி வேனின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது.

சுதாரித்த ரவி, உடனடியாக வேனை நிறுத்தி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார். அடுத்த சில வினாடிகளில் வாகனம் கொழுந்துவிட்டெரிய துவங்கியது.

தகவல் அறிந்து வந்த வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது.

விபத்தின் போது வாகனத்தில் பள்ளி மாணவ – மாணவியர் யாரும் இல்லாத காரணத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், வேளச்சேரி- – பள்ளிக்கரணை சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us