/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஐ.சி.ஏ.,கோப்பை இந்திய அணிக்கு இரண்டாம் இடம்
/
ஐ.ஐ.சி.ஏ.,கோப்பை இந்திய அணிக்கு இரண்டாம் இடம்
ADDED : மே 01, 2024 12:42 AM

சென்னை, :ஐ.ஐ.சி.ஏ., எனும் 'இந்திய இன்டோர் கிரிக்கெட் சங்கம்' சார்பில், இன்டோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இலங்கையில், 21ல் துவங்கி, 29ல் நிறைவடைந்தது. இந்தியா உட்பட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த, 17 அணிகள் பங்கேற்றன. போட்டியில், இந்திய அணியில், தமிழக வீராங்கனையர் 11 பேர் இடம் பெற்றனர்.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 16 ஓவர்களில், 127 ரன்களை அடித்தனர். அடுத்து பேட் செய்த இந்திய அணி துவக்கத்தில் இருந்து ரன்களை குவித்தது. பின், அடுத்தடுத்த விக்கெட் சரிந்ததால், ரன்கள் குறைந்தன.
முடிவில், 16 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இலங்கை அணி முதலிடம் பிடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது.