ADDED : ஜூன் 01, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
கிண்டி: எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் பணிபுரிந்த காவலாளி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிண்டி, பாரதி நகரைச் சேர்ந்தவர் சுலைமான், 49. கிண்டியில் உள்ள, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
தினமும் மது அருந்தி வீட்டுக்கு செல்வதால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தகராறில் கோபித்துக்கொண்ட மனைவி, இரண்டு பிள்ளையுடன் வீட்டில் இருந்து வெளியேறி, உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த சுலைமான், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
