ADDED : மே 20, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபிராமபுரம்:அபிராமபுரம் பகுதியில் நேற்று முன்தினம் அபிராமபுரம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏ.டி.எம்., வாசலில், சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார்.
போலீசை கண்டதும், அங்கிருந்து நழுவ முயன்றார். போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரிஸ்வான், 27, என தெரிந்தது.
அவரிடம், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணத்தை, ஏ.டி.எம்., டெபாசிட் மிஷினில் செலுத்த இருந்தது தெரிந்தது. போலீசார், பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
ரோந்து போலீசில் சிக்கும் முன், ரிஸ்வான் பல்வேறு ஏ.டி.எம்., மிஷினில் 7 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளார். 'ஹவாலா' பணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

