/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டு மையுடன் செல்பி: வாக்காளர்கள் ஆர்வம்
/
ஓட்டு மையுடன் செல்பி: வாக்காளர்கள் ஆர்வம்
ADDED : ஏப் 20, 2024 12:13 AM

சென்னை, தேர்தல் 'செல்பி பாயின்ட்டில்' புகைப்படம் எடுக்க இளம் வாக்காளர்கள் முதல் அனைவரும் ஆர்வம் காட்டினர். லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் செல்பி பாயின்ட் வைக்கப்பட்டுள்ளன.
அதில், 'தேர்தல் திருவிழா' என்ற தலைப்பில், 'ஐ எம் ஏ பிரவுட்டூ சிட்டிசன் மற்றும் போட்டோ எடுங்க... டாக் பண்ணுங்க... கோலாப் பண்ணுங்க... பிரைஸ் அள்ளுங்க...' என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளன.
அதில், இளம் வாக்காளர்கள் முதல் அனைவரும் ஓட்டு போட்ட அடையாளமான விரல் மையை காண்பித்து, தங்களது மொபைல்போனில் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்தனர். தை, தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்வதால், மற்றவர்களுக்கும் அதேபோல் படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள 'பூத்' ஒன்றில், அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி, 18, என்ற முதல் பெண் வாக்காளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்.
அவரை தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., காலனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

