/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்டிமென்ட்' கோவில் மறந்துபோன தமிழிசை
/
'சென்டிமென்ட்' கோவில் மறந்துபோன தமிழிசை
ADDED : ஏப் 13, 2024 12:17 AM
திருவொற்றியூர்,தென் சென்னை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக, தமிழிசை போட்டியிடுகிறார். இவரது இஷ்டதெய்வமாக, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உள்ளது.
எந்த ஒரு விசேஷ நிகழ்வாக இருந்தாலும், இந்த கோவிலுக்கு வந்து, அம்மனை தரிசித்து செல்வது அவரது வழக்கம்.
தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட போதும், தெலுங்கானா - புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட போதும், இக்கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்த பின்பே, அவர் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தென்சென்னை வேட்பாளராக களமிறங்கியுள்ள அவர், இக்கோவிலுக்கு வரவில்லை.
பல உயர் பதவிகளை அடைந்தபோதும், வடிவுடையம்மன் அம்மனை மறக்காத தமிழிசை, தென் சென்னை வேட்பாளரான பின் மறந்துவிட்டார் போல!

