/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேது பாஸ்கரா கோப்பை போட்டி வாலிபாலில் 48 பள்ளிகள் மோதல்
/
சேது பாஸ்கரா கோப்பை போட்டி வாலிபாலில் 48 பள்ளிகள் மோதல்
சேது பாஸ்கரா கோப்பை போட்டி வாலிபாலில் 48 பள்ளிகள் மோதல்
சேது பாஸ்கரா கோப்பை போட்டி வாலிபாலில் 48 பள்ளிகள் மோதல்
ADDED : ஆக 03, 2024 12:31 AM

சென்னை,சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளி சார்பில், சேது பாஸ்கரா கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், அம்பத்துாரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று காலை துவங்கின.
பள்ளிகளுக்கான வாலிபால், மாணவியர் மற்றும் ஊழியர்களுக்கான எறிபந்து மற்றும் இருபாலருக்கான கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று, வாலிபால் போட்டியை, பள்ளியின் முதல்வர் துவக்கி வைத்தார்.
பொன்னேரி வேலம்மாள் பள்ளி, 15 - 12, 15 - 4 என்ற கணக்கில் பெரம்பூர் கே.ஆர்.எம்., பப்ளிக் பள்ளியையும், ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, 15 - 6, 15 - 7, 15 - 9 என்ற கணக்கில் திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி., பள்ளியையும் வீழ்த்தின.
ஆலந்துார் ஏ.ஜி.எஸ்., பள்ளி, 15 - 2, 15 - 4 என்ற கணக்கில் சான் அகாடமியையும், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி, 15 - 2, 15 - 2 என்ற கணக்கில் பெரம்பூர் கே.ஆர்.எம்., பள்ளியையும் தோற்கடித்தன.
சேது பாஸ்கரா பள்ளி, 15 -11, 15 - 5 என்ற கணக்கில் ஆவடி காந்தி பள்ளியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
இன்று, மாணவியர் மற்றும் ஊழியர்களுக்கான எறிபந்து போட்டிகள் நடக்கின்றன.
சென்னை, ஆக. 3--
சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளி சார்பில், சேது பாஸ்கரா கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், அம்பத்துாரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று காலை துவங்கின.
பள்ளிகளுக்கான வாலிபால், மாணவியர் மற்றும் ஊழியர்களுக்கான எறிபந்து மற்றும் இருபாலருக்கான கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று, வாலிபால் போட்டியை, பள்ளியின் முதல்வர் துவக்கி வைத்தார்.
இன்று, எறிபந்து போட்டிகள் நடக்கின்றன.