ADDED : ஜூலை 04, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 41. மேளம் செய்து கொடுப்பதுடன், நிகழ்ச்சிகளுக்கு மேளம் அடிக்கவும் சென்று வந்துள்ளார்.
நேற்று மதியம், மேளம் வாங்க வருவது போல் முருகன் வீட்டில் நுழைந்த ஆறு பேர், கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார்.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலையில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாயிலாக, ஏழு பேர் நேற்று சரணடைந்துள்ளனர்.
அவர்கள் வேல்முருகன், 30, சஞ்சய்,23, வசந்த்,29, பிரபாகரன்,29, பிரேம்குமார்,22, அபிராஜ்,26, மற்றும் விஜய்,27, ஆகிய ஏழு பேரிடம், பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவரை தேடி வருகின்றனர்.