ADDED : ஜூன் 17, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பரம்பாக்கம்:சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் நீர்வரத்து பகுதிகளான செம்பரம்பாக்கம், பழஞ்சூர், தண்டலம், மேவளூர்குப்பம், இருங்காட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகள் உள்ளன.
இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியின் உள்ளே பல ஆண்டுகளாக கலந்து வருகிறது.
தவிர, கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், ஏரியின் உள்ளே கொட்டி தீ வைக்கப்படுகிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஏரியில் கலப்பதை தடுக்க திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.