/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீர்
/
பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : செப் 18, 2024 12:56 AM

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் வளாகத்தில் மாநகராட்சி, மின் வாரிய அலுவலகம், ரேஷன் கடைகள் உள்ளன. அங்கும், தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக பேருந்து நிலைய வளாகத்தில், பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி அதை முறையாக பராமரிக்காததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில், கழிப்பறையின் தொட்டி நிரம்பி, கழிவுநீர் காலிமனையில் தேங்கி நிற்கிறது.
இதன் அருகில் ரேஷன் கடைகள் செயல்படுவதால், பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் அவதிப்படுகின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, கழிப்பறையை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.

