ADDED : செப் 08, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜன் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூந்தமல்லியில் மழை நீர் வடிகாலில் கழிவு நீரை கொட்டிய இரண்டு கழிவு நீர் அகற்றும் டேங்கர் லாரிகளை மடக்கி பிடித்து, பறிமுதல் செய்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவர் கூறுகையில், ''டேங்கர் லாரி ஓட்டுனர்கள் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில், பொது இடத்தில் கழிவு நீரை கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனர். பொது இடங்களில் கழிவு நீர் கொட்டும் லாரிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.