/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் குழாய் உடைப்பு போக்குவரத்து பாதிப்பு
/
கழிவுநீர் குழாய் உடைப்பு போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 02, 2024 12:14 AM
சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் 28,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சோழிங்கநல்லுார் சுத்திகரிப்பு நிலையம் செல்கிறது.
இதற்காக, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, குமரன் நகர், ஓ.எம்.ஆர்., மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலை வழியாக குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
இதில், குமரன் நகர் சந்திப்பில் வளைவாக செல்லும் பகுதியில் நேற்று, குழாயில் விரிசல் ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் வெளியேறி சாலை முழுதும் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து, குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குழாயில் செல்லும் கழிவுநீரை நிறுத்தி, சீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், இரவுக்குள் நிலைமை சீராகும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
இந்த பணியால், ஓ.எம்.ஆரில் இருந்து, 80 அடி அகல நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.