/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.45 கோடி செலவில் கழிவுநீர் குழாய் அமைப்பு
/
ரூ.1.45 கோடி செலவில் கழிவுநீர் குழாய் அமைப்பு
ADDED : மே 30, 2024 12:13 AM
திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 115, 116வது வார்டுகளில் கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தேனாம்பேட்டை மண்டலம், திருவல்லிக்கேணி, 115, 116வது வார்டுகளில், கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, அப்பகுதியை மண்டல அதிகாரி செல்லக்கண்ணு ஆய்வு செய்தார். இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும், மிகவும் பழையது என கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரண்டு வார்டுகளிலும் உள்ள, 30 தெருக்களிலும் உள்ள பழைய கழிவுநீர் குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 1.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்த 3,500 பொதுமக்கள் பயனடைவர்.