/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருமகளை மிரட்டி பலாத்காரம் காமுக மாமனார் கைது
/
மருமகளை மிரட்டி பலாத்காரம் காமுக மாமனார் கைது
ADDED : ஆக 01, 2024 12:33 AM
கோயம்பேடு, மருமகள் மீது சபலப்பட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், பெயின்டிங் வேலை செய்யும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.
இவர்கள் குடும்பமாக வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம், அப்பெண் தன் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார்.
இதையறிந்து, அவரது கணவரின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். மருமகள் மீது சபலப்பட்டிருந்த அந்த நபர், தான் கையில் கொண்டு வந்த ஆசிட் பாட்டிலை காட்டி மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, 'காமுக' மாமனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.