/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாட்டிற்கு வராத மேம்பாலத்தில் மாயமாகும் தடுப்புகளால் அதிர்ச்சி
/
பயன்பாட்டிற்கு வராத மேம்பாலத்தில் மாயமாகும் தடுப்புகளால் அதிர்ச்சி
பயன்பாட்டிற்கு வராத மேம்பாலத்தில் மாயமாகும் தடுப்புகளால் அதிர்ச்சி
பயன்பாட்டிற்கு வராத மேம்பாலத்தில் மாயமாகும் தடுப்புகளால் அதிர்ச்சி
ADDED : ஆக 15, 2024 12:20 AM

சென்னை - திருவள்ளூர் இணைக்கும் வகையில், ஆவடி அடுத்த பட்டாபிராமில் எல்.சி., - 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவுப் பாதையில், 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்வே 'கேட்' மூடப்பட்டு, சென்னையில் இருந்து பட்டாபிராம் 'சைடிங்' செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து, நெடுஞ்சாலையில் தினமும் அரை கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுப்பது வாடிக்கையாகி விட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை --- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டது. கடந்த 2010 - 11 நிதியாண்டில், மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு 52.11 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த 2018ல் பணிகள் துவங்கி ஆமைவேகத்தில் நடந்தன.
ஒருவழியாக, ஐந்து ஆண்டுகளுக்கு பின், மேம்பாலத்தின் ஒருவழிப்பாதையை திறப்பதற்கான அனைத்து பணிகளும் கடந்த மாதம் முடிந்தது.
விக்கிரவாண்டி தேர்தல் முடிந்ததும் திறக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று வரை மேம்பாலம் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் சாலையின் குறுக்கே, 780 மீட்டர் துாரத்திற்கு மைய தடுப்பிற்காக 'டெலினேட்டர்' எனும் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 10க்கும் மேற்பட்டவை மாயமாகி உள்ளன.
மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்குள் அவை மாயமானதால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -