/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்டு வெடி பதுக்கிய கடைக்காரர்கள் கைது
/
நாட்டு வெடி பதுக்கிய கடைக்காரர்கள் கைது
ADDED : மே 05, 2024 12:29 AM
ஓட்டேரி, ஓட்டேரி, சுப்புராயன் தெருவில் உள்ள கடையில், உரிய அனுமதி இன்றி நாட்டு வெடி பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், நான்கு பெட்டிகளில் இருந்து, நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை நடத்தி வந்த ஓட்டேரியைச் சேர்ந்த கவின்குமார், 34, மற்றும் சதீஷ்குமார், 36, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், மூன்று மாதத்திற்கு முன், திருவிழாக்களில் வெடிக்கப் பயன்படுத்தும் நாட்டு பட்டாசுகளை, புதுச்சேரியில் இருந்து வாங்கி கடையில் வைத்திருந்தனர். ஆபத்தை ஏற்படுத்தும் இத்தகைய பட்டாசுகளை உரிய அனுமதி பெற்று, தகுந்த பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும். ஆனால் இது எதையும் பின்பற்றாத காரணத்தால், கைது செய்யப்பட்டனர்.
பின், காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதில், சதீஷ்குமார் காங்., கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட 74வது வட்ட தலைவராக உள்ளார்.