ADDED : ஆக 01, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம்,வில்லிவாக்கம் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த அயனாவரத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சாய் ஜெயராமன், கடந்த 26ம் தேதி பணி முடித்து வீட்டுக்கு பைக்கில் சென்றார்.
அப்போது, அவரது பைக் மீது ஈச்சர் லாரி இணைக்கப்பட்ட ஜல்லி கலவை இயந்திரம், சாய் ஜெயராமன் மீது மோதியது.
இதில் காயமடைந்த சாய் ஜெயராமன் கணுக்கால் துண்டிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். இவரது இறுதிச்சடங்கு, இன்று ஓட்டேரியில் நடக்க உள்ளது.