/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடியில் சித்தர் பீடம் நாளை திருக்குடமுழுக்கு விழா
/
வியாசர்பாடியில் சித்தர் பீடம் நாளை திருக்குடமுழுக்கு விழா
வியாசர்பாடியில் சித்தர் பீடம் நாளை திருக்குடமுழுக்கு விழா
வியாசர்பாடியில் சித்தர் பீடம் நாளை திருக்குடமுழுக்கு விழா
ADDED : செப் 07, 2024 12:42 AM

வியாசர்பாடி, செப். 7-
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இக்கோவில் சார்பில், வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திருக்குடமுழுக்கு பெருவிழா, நாளை நடக்க உள்ளது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரின் நல்லாசியுடன், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என, சித்தர் பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.